LATEST NEWS
“என் தலைவரைத் தொட்டா விடமாட்டோம்..மாண்புமிகுவாக இருந்தாலும் சரி..” முதல்வர் விஜயைக்கு மேயர் பிரியா விடுத்த அதிரடி எச்சரிக்கை….!!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசிய உரையை கண்டித்து திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் , “என் தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடமாட்டேன் என்று சொல்வதைப் போல, என் தலைவரைத் தொட்டது யாராக இருந்தாலும், அவர் மாண்புமிகுவாக இருந்தாலும் நாங்கள் சும்மா விடமாட்டோம்” என்று சென்னை மேயர் பிரியா மிகக் காரசாரமாகப் பேசியுள்ளார். அண்மையில் சட்டமன்றத்தில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, முதல்வர் விஜய்யின் உடல்மொழி மற்றும் பேச்சுக்கள் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை மறைமுகமாகக் குறிவைத்துத் தாக்கும் விதமாக இருந்ததாகக் கூறி திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் தொடர் போராட்டங்களும் கண்டனக் கூட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய மேயர் பிரியா, திமுகவின் தொண்டர்கள் தங்களது கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினைத் தங்களது குடும்பத் தலைவராகவே பார்க்கிறார்கள் என்பதைத் தனது பேச்சின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். சட்டமன்றத்திற்கு என்று ஒரு பாரம்பரிய மாண்பு இருக்கிறது என்பதை இப்போதைய ஆளுங்கட்சியினர் உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், தங்களது தலைவரைப் பற்றி அவதூறாகப் பேசினால் திமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் கூட அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
