“அன்னைக்கே விஜய் கதையை அமித்ஷா முடிச்சிருப்பார்” உங்களுக்கு முதலில் ஆதரவு தந்தது நாங்கதான்… தவெக அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய மாணிக்கம் தாகூர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அன்னைக்கே விஜய் கதையை அமித்ஷா முடிச்சிருப்பார்” உங்களுக்கு முதலில் ஆதரவு தந்தது நாங்கதான்… தவெக அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய மாணிக்கம் தாகூர்..!!

Published

on

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்குக் காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவு குறித்தும், மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் அரசியல் நகர்வுகள் குறித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் அண்மையில் அதிரடியான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்க முதன்முதலில் ஆதரவுக் கடிதம் கொடுத்தது காங்கிரஸ் கட்சி தான் என்றும், இந்த உண்மை தவெக அமைச்சர்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தவெக அமைச்சர்கள் சிலர் ‘முதலமைச்சர் விஜய் தான் அடுத்த பிரதமர்’ எனப் பேசி வரும் சூழலில், ‘அடுத்த பிரதமர் ராகுல் காந்தி’ என அவர்கள் ஏன் கூறவில்லை என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

Advertisement

மேலும் தற்போதைய அரசியல் சூழலை விமர்சித்த மாணிக்கம் தாகூர், ஒருவேளை காங்கிரஸ் கட்சி தவெக அரசுக்கு முன்கூட்டியே தனது ஆதரவை வழங்கி முட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால், முதலமைச்சர் விஜய்யின் அரசியல் கதையை மத்திய அமைச்சர் அமித்ஷா எப்போதோ முடித்திருப்பார் எனக் கடுமையான வார்த்தைகளால் தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in