“அவள் என்னை கொடூரமாக ஏமாற்றிவிட்டாள்..!” காதலியின் மொபைல் ஸ்க்ரீனைப் பார்த்ததும் உறைந்துபோன காதலன்.. அடுத்த நொடியே வாலிபர் எடுத்த விபரீதம் முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அவள் என்னை கொடூரமாக ஏமாற்றிவிட்டாள்..!” காதலியின் மொபைல் ஸ்க்ரீனைப் பார்த்ததும் உறைந்துபோன காதலன்.. அடுத்த நொடியே வாலிபர் எடுத்த விபரீதம் முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

Published

on

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த நகுல் என்ற 24 வயது இளைஞர், தனது 7 ஆண்டுகாலக் காதலில் ஏற்பட்ட மெகா துரோகம் மற்றும் ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் கால்வாயில் குதித்துத் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹேர் ஸ்டைலிஸ்ட்டாகப் பணியாற்றி வந்த நகுல், தனது காதலியின் மொபைல் போனை தற்செயலாகப் பார்த்தபோது, அவள் வேறொரு பையனுடன் மிகவும் நெருக்கமாகவும், ஆழமாகவும் காதல் சாட்டிங் செய்திருந்ததை நெஞ்சை உலுக்கும் விதமாகக் கண்டும்பிடித்துள்ளார். 7 ஆண்டுகளாகத் தான் உயிராக நேசித்த காதலி தனக்குத் துரோகம் செய்ததை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

தனது தற்கொலை விபரீத முடிவுக்கு முன்பாக நகுல், “நான் சாகப் போகிறேன், என் வாழ்க்கை சரியாக அமையவில்லை. அவள் என்னை மிகக் கொடூரமாக ஏமாற்றிவிட்டாள், இனி நான் வாழ விரும்பவில்லை” என்று உருக்கமாகப் பேசிய இறுதி வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் வெளியாகி நெட்டிசன்களைக் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. காதலின் பெயரால் நேர்ந்த இந்த மெகா ஏமாற்றத்தால் விரக்தியின் உச்சத்துக்கே சென்ற நகுல், ஆக்ரோஷமாகப் பாய்ந்தோடிய கால்வாயில் குதித்துத் தனது இன்னுயிரைத் துறந்துள்ளார். இந்த நெஞ்சை உலுக்கும் தற்கொலை வழக்கு குறித்துப் ஃபரிதாபாத் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in