LATEST NEWS
அண்ணே எனக்கு அந்த பதவி கொடுங்க…! “துரைமுருகன், நேரு பதவிகளுக்கு குறிவைக்கும் கனிமொழி..?” செயற்குழு கூட்டத்தில் அதிரடி டிமாண்ட்… அதிர்ச்சியில் அதிரும் அறிவாலயம்..!!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து, கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்துவது மற்றும் நிர்வாகக் கட்டமைப்பை முற்றிலும் சீரமைப்பது தொடர்பாக இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகளும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்தச் சூழ்நிலையில், தற்போதைய திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி, கட்சிக்குள் இன்னும் கூடுதல் அதிகாரமிக்க பொறுப்பு ஒன்றைக் கேட்டுள்ளதாகப் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் தவிக்கும் துரைமுருகன் வசம் இருக்கும் ‘பொதுச்செயலாளர்’ பதவி அல்லது கே.என்.நேரு வகித்து வரும் ‘முதன்மைச் செயலாளர்’ பதவி ஆகிய இரண்டில் ஒன்றை அவர் குறிவைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், திமுகவின் புதிய கட்சிச் சீரமைப்பில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் கனிமொழி முன்வைத்துள்ளார். கட்சித் தலைமைப் பொறுப்புகளில் கூடுதல் கவனம் செலுத்த விரும்பும் கனிமொழியின் இந்த அதிரடி நகர்வு, திமுகவின் அடுத்தகட்ட அரசியல் ரீதியான மாற்றங்களில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
