LATEST NEWS
“எல்லாத்துக்கும் அத்தை தான் காரணம்” ஸ்டாலினிடம் கனிமொழி குறித்து உதயநிதி போட்ட பகீர் கம்ப்ளைன்ட்..திமுகவில் வெடித்த ‘அத்தை – மருமகன்’ மோதல்..!!
திமுகவிற்குள் தற்போது நிலவி வரும் மிக முக்கியமான உட்கட்சிப் பஞ்சாயத்தாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி இடையேயான மோதல் உருவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, கனிமொழி தனது முழு கவனத்தையும் மாநில அரசியல் மற்றும் கட்சியின் உள்விவகாரங்கள் பக்கம் திருப்பத் தொடங்கியுள்ளார். இது திமுகவின் அடுத்தகட்ட தலைமைப் போட்டியில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, சமூக வலைதளங்களில் “திமுகவின் அடுத்த தலைவர் கனிமொழி” என்றும், “2031-ஆம் ஆண்டின் முதலமைச்சர் வேட்பாளர் கனிமொழிதான்” என்றும் குறிப்பிடும் வகையிலான பல வீடியோக்களும், பதிவுகளும் திடீரென வலம் வரத் தொடங்கியுள்ளன. இந்த வீடியோக்கள் திமுக தொண்டர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் மிக வேகமாகப் பகிரப்பட்டு, கட்சியின் எதிர்காலத் தலைமை குறித்த விவாதங்களை மீண்டும் சூடாக்கியுள்ளன.
சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோக்களைக் கண்டு கடும் அதிருப்தி அடைந்த உதயநிதி ஸ்டாலின், உடனடியாக இந்த விவகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். தனக்கு எதிராகத் திட்டமிட்டு பரப்பப்படும் இந்த வீடியோக்களுக்குப் பின்னணியில் கனிமொழிதான் இருக்கிறார் என்று உதயநிதி நேரடியாகவே ஸ்டாலினிடம் புகாராகக் கூறியுள்ளதாக அறிவாலய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
