LATEST NEWS
ஐய்யோ கொடுமையே…! 60 அடி ஆழக் கிணற்றில் மூழ்கிய தம்பி… காப்பாற்ற ஓடோடிச் சென்று குதித்த அண்ணன்… அடுத்த நொடியே நடந்த கோர விபரீதம்..! ரக்ஷா பந்தன் பண்டிகை நாளில் அரங்கேறிய நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
உத்தரப் பிரதேசத்தின் ஜாலௌன் மாவட்டத்திற்குட்பட்ட கைலியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரியாவலி கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை இந்த துயர சம்பவம் நடந்தது. கிராமத்தைச் சேர்ந்த பூல் சிங் குஷ்வாஹா மற்றும் அவரது தம்பி ராம் லக்கன் குஷ்வாஹா ஆகியோருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் 60 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் கிணற்றில் நீர்மட்டம் உயர்ந்ததால், பாசனத்திற்காகப் பொருத்தப்பட்டிருந்த மோட்டார் பம்ப் நீரில் மூழ்கத் தொடங்கியது. இதனால், மோட்டாரை வெளியே எடுப்பதற்காக வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் சகோதரர்கள் இருவரும் கிணற்றின் அருகே சென்றுள்ளனர்.
மோட்டாரை எடுப்பதற்காக தம்பி ராம் லக்கன் குஷ்வாஹா கயிற்றின் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கினார். அவர் மோட்டாரை எட்ட முயன்றபோது, எதிர்பாராதவிதமாக ஆழமான நீரில் மூழ்கத் தொடங்கினார். தன் கண் முன்னே தம்பி தவிப்பதைக் கண்ட அண்ணன் பூல் சிங், அவரைப் காப்பாற்றுவதற்காக யோசிக்காமல் உடனடியாகக் கிணற்றுக்குள் இறங்கினார். ஆனால், கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் அண்ணனாலும் சமாளிக்க முடியாமல் இருவரும் நீரில் மூழ்கினர்.
அக்கம் பக்கத்தினர் இதைக் கண்டு கிராம மக்களுக்குத் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்தில் மக்கள் திரண்டனர். உடனே கைலியா காவல் நிலையப் போலீசாருக்கும், ‘டயல்-112’ மற்றும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த மீட்புக் குழுவினர், கிராம மக்களின் உதவியுடன் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இருவரின் உடல்களையும் கிணற்றிலிருந்து மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்காக உடல்கள் அனுப்பப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்ஷா பந்தன் திருநாளில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் ஒன்றாக உயிரிழந்த சம்பவம் அக்குடும்பத்தினரையும் கிராம மக்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
