“திமுக ஒருபோதும் அஞ்சாது… எதிர்க்கட்சியின் குரல்வளையை நெரிக்கப் பார்க்கிறது அரசு..!” லஞ்ச ஒழிப்புச் சோதனையின் பின்னணியில் அரசியல் பழிவாங்களா..? கனிமொழி பரபரப்பு குற்றச்சாட்டு.!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திமுக ஒருபோதும் அஞ்சாது… எதிர்க்கட்சியின் குரல்வளையை நெரிக்கப் பார்க்கிறது அரசு..!” லஞ்ச ஒழிப்புச் சோதனையின் பின்னணியில் அரசியல் பழிவாங்களா..? கனிமொழி பரபரப்பு குற்றச்சாட்டு.!!

Published

on

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்குத் தொடர்புடைய வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் சோதனைகளுக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சட்டமன்றத்தில் தி.மு.கழகத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், தொடர்ந்து அவதூறுகளையும் திசைதிருப்பல் நாடகங்களையும் அரங்கேற்றி வந்த தவெக அரசு, தற்போது காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்கே சென்று, கழக முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என். நேரு அவர்களைப் பழிவாங்கப் பார்க்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மேலும், மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் தி.மு.கழகம் அல்ல என்றும், எதிர்க்கட்சியின் குரல்வளையை நெரிப்பதற்காக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் இந்த ஜனநாயக விரோத தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து தி.மு.கழகம் ஒருபோதும் அஞ்சாது என்றும் கனிமொழி எம்.பி. உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in