எந்த சிக்கல் வந்தாலும் பரவாயில்ல… அந்த விஷயத்தில் மட்டும் பின்வாங்க மாட்டேன்… உறுதியாக நிற்கும் முதல்வர் விஜய்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எந்த சிக்கல் வந்தாலும் பரவாயில்ல… அந்த விஷயத்தில் மட்டும் பின்வாங்க மாட்டேன்… உறுதியாக நிற்கும் முதல்வர் விஜய்..!!!

Published

on

பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு முதலமைச்சர் விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அந்தத் திட்டத்தை அங்கு செயல்படுத்தக் கூடாது என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இத்திட்டத்தை கைவிட்டால் முதலீட்டாளர்கள் பின்வாங்குவார்கள் என்றும், பொருளாதார ரீதியாகப் பின்னடைவு ஏற்படும் என்றும் அரசு அதிகாரிகள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், “எவ்வளவு பெரிய சிக்கல் வந்தாலும் பரவாயில்லை, பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக் கூடாது” என்பதில் விஜய் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக வெற்றி கழகம் கட்சியைத் தொடங்கிய பிறகு, விஜய் முதன்முறையாக நேரடியாக மக்களைச் சந்தித்துப் பேசிய இடம் பரந்தூர் தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. “என்னுடைய கள அரசியலே பரந்தூர் மண்ணில் இருந்துதான் தொடங்கியது” என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், அங்கிருக்கும் மக்களின் உணர்வுகளுக்கும் நில உரிமைக்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்த முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறாராம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in