LATEST NEWS
கார் வேண்டாம்… அதுக்கு பதிலா ஒரு ஆபீஸ் கட்டிக் கொடுங்க… முதல்வருக்கு ஜோதிமணி கோரிக்கை..!!!
கோவையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிமணி, தமிழ்நாட்டில் உள்ள எம்பி-க்களுக்கு மக்கள் பணிகளைச் செய்வதற்காகத் தனி அலுவலகங்களை அரசு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வசதியான பின்னணியில் இருந்து வருவதில்லை என்றும், அவர்கள் மக்கள் பணியை நேர்மையாகச் செய்ய அடிப்படையான சில வசதிகளை அரசு ஏற்படுத்தித் தருவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் பேசிய அவர், மக்கள் பிரதிநிதிகளுக்கு வாகனங்கள் வழங்குவது போன்ற அம்சங்களை விட அலுவலக வசதியே முக்கியமானது என்று குறிப்பிட்டார். தங்களுக்கு புதிய கார்கள் தேவையில்லை என்றும், எம்பி-க்கள் அனைவரும் ஏற்கனவே சொந்த வாகனங்களை வைத்திருப்பதால், தொகுதியில் மக்களைச் சந்தித்து அவர்களின் மனுக்களைப் பெற்றுப் பணியாற்றத் தேவையான அலுவலகக் கட்டடங்களை மட்டுமே அரசு கட்டித் தர வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார்.
