LATEST NEWS
பெற்றோரை பிரிஞ்சு தனிக்குடித்தனம் வர வற்புறுத்துவது மன உளைச்சல் கொடுமை… சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு..!!
ஒரே மகனாக உள்ள கணவரை, அவரது வயதான பெற்றோரைப் பிரிந்து தனிக்குடித்தனம் வர வற்புறுத்துவது கணவருக்கு இழைக்கப்படும் மனரீதியான துன்புறுத்தலுக்குச் சமம் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. விவாகரத்து கோரிய தம்பதியரின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர்களுக்குக் குடும்ப நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய விவாகரத்தை உறுதி செய்து இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேலும், தாம்பத்திய வாழ்க்கை என்பது கணவன்-மனைவி ஆகிய இருவரின் பரஸ்பர புரிதலில் அமைய வேண்டும் என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அதை விடுத்து, சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் அடிக்கடி பெற்றோர் வீட்டிற்குச் சென்று, கணவருக்குத் தேவையற்ற அச்ச உணர்வையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துவது மனைவியின் கடுமையான குடும்பக் கொடுமை என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
