LATEST NEWS
“ஆண் வாரிசு வேணும்.. வெளியே போ!” 4 பெண் குழந்தைகளுடன் மனைவியை துரத்திய கணவன்.. இணையத்தில் வைரலாகும் தாயின் கண்ணீர் வீடியோ..!!
பீகார் மாநிலம் சமஸ்திப்பூர் பகுதியில், ஆண் வாரிசு வேண்டும் என்ற பேராசை பல ஆண்டுகளாக மகிழ்ச்சியாக இருந்த ஒரு குடும்பத்தை முற்றிலுமாகச் சீரழித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு துதுன் மிஸ்ரா என்பவருக்கும் கும் கும் தேவி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பின் கடந்த ஒன்பது ஆண்டுகளில் கும் கும் தேவி நான்கு அழகான பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். ஆனால், தனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்ற வெறியால் கணவர் துதுன் மிஸ்ரா தனது நான்கு பெண் குழந்தைகளையும், மனைவியையும் வீட்டை விட்டு இரக்கமின்றி வெளியே துரத்தியுள்ளார்.
बेटे की चाहत ने Bihar के समस्तीपुर में एक हंसता-खेलता घर उजाड़ दिया।
2017 में Tutun Mishra की शादी Kumkum Devi से हुई थी।
बीते 9 सालों में Kumkum Devi ने चार प्यारी बेटियों को जन्म दिया।
लेकिन, बेटे की लालसा में Tuntun Mishra इस कदर अंधा हो गया कि उसने बेरहमी से अपनी पत्नी… pic.twitter.com/su3wjdW3aC— Afjal Raj Guru (@afjalrajguru) August 22, 2026
பெண் குழந்தைகளைப் பாரமாக நினைக்கும் சமூகத்தின் கசப்பான உண்மையை இந்தச் சம்பவம் பிரதிபலிக்கிறது. மனைவியையும் குழந்தைகளையும் துரத்தியதோடு நிற்காமல், ஆண் குழந்தைக்காகத் துதுன் மிஸ்ரா தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளத் தீவிரமாகத் தயாராகி வருகிறார். இந்த அவலம் குறித்து பாதிக்கப்பட்ட மனைவி வீடியோவில் கண்ணீருடன் வெளியிட்டுள்ள தகவல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
