மோடி இந்திய சுதந்திரத்தினத்தை கொண்டாடல… சட்டைப் பையில் தலைகீழாக இருந் தேசியக்கொடி… பேச்சில் அடுத்தடுத்து தடுமாற்றம்… கிழித்துத் தொங்கவிட்ட காங்கிரஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மோடி இந்திய சுதந்திரத்தினத்தை கொண்டாடல… சட்டைப் பையில் தலைகீழாக இருந் தேசியக்கொடி… பேச்சில் அடுத்தடுத்து தடுமாற்றம்… கிழித்துத் தொங்கவிட்ட காங்கிரஸ்..!!

Published

on

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையும், அவரது ஆடையில் இருந்த தேசியக் கொடியின் வடிவமும் தற்பொழுது பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. விழாவின் போது பிரதமரின் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம் மற்றும் அவரது தோற்றம் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

சுதந்திர தின உரையின் போது, இந்தியாவில் கடந்த 2009-10 ஆம் நிதியாண்டில் 25 லட்சம் மின்சார வாகனங்கள் விற்கப்பட்டதாகப் பிரதமர் மோடி முதலில் தவறாகக் குறிப்பிட்டார். பின்னர் உடனடியாகத் தன்னைத் திருத்திக் கொண்ட அவர், அது 1.5 லட்சம் வாகனங்கள் என்று மாற்றித் தந்து, 2025-26 ஆம் ஆண்டில் இந்த விற்பனை 25 லட்சமாக உயர்ந்துள்ளது என்று விளக்கமளித்தார். பிரதமரின் இந்தத் தடுமாற்றத்தைக் குறிப்பிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மிகுந்த நம்பிக்கையற்ற மற்றும் பதற்றமான நிலையில் காட்சியளிப்பதாகத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு விமர்சித்துள்ளார்.

Advertisement

இவற்றுக்கெல்லாம் மேலாக, பிரதமர் மோடியின் சட்டைப் பையில் சதுர வடிவில் அச்சிடப்பட்டிருந்த மூவர்ணத் தேசியக் கொடி தலைகீழாக (இடமிருந்து வலமாக) மாறி இருந்தது கடுமையான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதில் முதலில் இருக்க வேண்டிய காவி நிறம் கடைசியிலும், கடைசியில் இருக்க வேண்டிய பச்சை நிறம் முதலிலும் அமைந்திருந்தது. இது அயர்லாந்து நாட்டின் தேசியக் கொடியைப் போல் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, “பிரதமர் இந்தியாவுக்குப் பதிலாக அயர்லாந்தின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறாரா?” என்று கிண்டலாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in