“120 அடி ஆழ ஓடையில் விழுந்த கணவன்”.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த எதிர்பாராத டுவிஸ்ட்.. மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்ட அமெரிக்கரின் திக் திக் நிமிடங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“120 அடி ஆழ ஓடையில் விழுந்த கணவன்”.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த எதிர்பாராத டுவிஸ்ட்.. மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்ட அமெரிக்கரின் திக் திக் நிமிடங்கள்..!!

Published

on

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள கிளேசியர் தேசிய பூங்காவிற்குத் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற கென் நர்ஸ் என்ற நபர், புகைப்படம் எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக 120 அடி ஆழமுள்ள மெக்டொனால்டு ஓடையில் விழுந்து உயிர் தப்பியுள்ளார். அவர் ஓடையின் விளிம்பிற்கு அருகில் சென்றபோது நிலச்சரிவு ஏற்பட்டதால் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

அங்கு ஓடிக் கொண்டிருந்த தண்ணீரில் முகங்குப்புற விழுந்த கென்னை அங்கிருந்த ஜோஷ் என்ற வழிப்போக்கர் உடனடியாக ஓடையில் குதித்து மீட்டு, அவருக்கு முதலுதவியாக சிபிஆர் தந்துள்ளார். இந்த உடனடி முதலுதவியின் காரணமாக கென்னுக்கு மீண்டும் இதயத்துடிப்பு மீண்டதை அடுத்து, மீட்பு ஹெலிகாப்டர் மூலம் அவர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

Advertisement

இந்தக் கொடூரமான விபத்தில் கென்னுக்கு விலா எலும்புகளில் முறிவு மற்றும் முழங்கையில் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின் ஆரோக்கியமாகத் தேறியுள்ள கென் மற்றும் அவரது குடும்பத்தினர், தங்களது உயிரைக் காப்பாற்றிய அந்த வழிப்போக்கருக்கும் மீட்புக் குழுவினருக்கும் தற்போது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in