“ஐயோ பாவம்.. அரசுப் பள்ளியை ISRO ஆய்வகமாக மாற்றிய ‘சூப்பர் எச்.எம்’ மரணம்..: இறுதி சடங்கில் கதறி அழும் மக்கள்.. நெட்டிசன்களை கண்கலங்க வைத்த வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ பாவம்.. அரசுப் பள்ளியை ISRO ஆய்வகமாக மாற்றிய ‘சூப்பர் எச்.எம்’ மரணம்..: இறுதி சடங்கில் கதறி அழும் மக்கள்.. நெட்டிசன்களை கண்கலங்க வைத்த வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேசத்தின் மௌ மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கல்வியாளரும் சமூக ஆர்வலருமான டாக்டர் ராம்விலாஸ் பாரதி, கடந்த செப்டம்பர் 26, 2026 அன்று டெல்லியில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் நடைபெற்ற பயிற்சித் திட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்த அவருக்கு, அங்கு எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 29 அன்று டோஹ்ரி காட் முக்தி தாமில்நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில், அந்த பிராந்தியத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கண்ணீர் மல்கக் கலந்துகொண்டு தங்களது அஞ்சலியைச் செலுத்தினர்.

மௌ மாவட்டத்தின் கோசி தஹ்சிலுக்குட்பட்ட மாச்சில் கிராமத்தைச் சேர்ந்த இவர், தராலியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். தனது சொந்தப் பொறுப்பிலும், சொந்தப் பணத்தைச் செலவழித்தும் அந்த அரசுப் பள்ளியின் தோற்றத்தையே மாற்றி, இஸ்ரோ போன்ற அதிநவீன ஆய்வகத்தை அங்கு அமைத்து, அதை ஒரு ஸ்மார்ட் பள்ளியாக மாற்றிக் காட்டினார். கல்வி மற்றும் பத்திரிகைத் துறையில் அவர் ஆற்றிய மிகச்சிறந்த பங்களிப்பிற்காக, மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சரால் கௌரவிக்கப்பட்டதோடு, புகழ்பெற்ற மாநில விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in