அய்யோ கொடுமையே… பிரிந்து வாழ்ந்த மனைவி படுகொலை.. பின்னணியில் கணவனா..? இளம்பெண் கொலையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யோ கொடுமையே… பிரிந்து வாழ்ந்த மனைவி படுகொலை.. பின்னணியில் கணவனா..? இளம்பெண் கொலையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..!!

Published

on

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளியம்மாள். இவருடைய கணவர் ஜெயசீலன், நில அளவைத் துறையில் சார் ஆய்வாளராக அரசு பணியில் இருந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, காளியம்மாள் தனது கணவரை விட்டுப் பிரிந்து தனது குழந்தையுடன் அப்பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை அக்கம்பக்கத்தினர் காளியம்மாளைப் பார்ப்பதற்கு வீட்டிற்குச் சென்றபோது, அவர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

தகவலறிந்து வந்த திண்டுக்கல் மாவட்ட போலீசார், காளியம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், காளியம்மாள் கொலை செய்யப்பட்ட நேரத்தில் இருந்து அவரது கணவர் ஜெயசீலனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், தலைமறைவாக உள்ள ஜெயசீலனைத் தேடத் தனிப்படை அமைத்து தீவிர வலைவீசி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in