அசல் டார்கெட் உதயநிதி தான்..? நேருவை தொடர்ந்து அன்பில் மகேஸ், மூர்த்திக்கு DVAC ஸ்கெட்ச்.. கோட்டை வட்டாரத்தை அதிரவைக்கும் பகீர் தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அசல் டார்கெட் உதயநிதி தான்..? நேருவை தொடர்ந்து அன்பில் மகேஸ், மூர்த்திக்கு DVAC ஸ்கெட்ச்.. கோட்டை வட்டாரத்தை அதிரவைக்கும் பகீர் தகவல்..!!

Published

on

தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளில், திமுகவின் மூத்த அமைச்சர் கே.என்.நேருவைத் தொடர்ந்து, தற்போது அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் பி. மூர்த்தி ஆகியோரையும் DVAC குறிவைத்துள்ளதாகக் கோட்டை வட்டாரங்களில் இருந்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தொடர் நடவடிக்கைகள் ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.

இந்த ஒட்டுமொத்த ஆபரேஷனின் உண்மையான இலக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உதயநிதி ஸ்டாலினின் நிழலாகவும், அவருக்கு மிகவும் நெருக்கமானவராகவும் வலம் வந்தவர் அன்பில் மகேஸ் என்பதால், அவரை நெருங்குவதன் மூலம் உதயநிதிக்கு அரசியல் ரீதியாக நெருக்கடியைக் கொடுக்க முடியும் என்பது இந்த வியூகத்தின் பின்னணி எனக் கூறப்படுகிறது.

Advertisement

மற்றொருபுறம், பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த பி. மூர்த்தி, தனக்கு எதிரான விசாரணைக் கணக்குகள் தொடங்கப்பட்டதை அறிந்து, “நான் தன்னிச்சையாக எதையும் செய்யவில்லை, மேலிடம் சொல்லித்தான் எல்லாவற்றையும் செய்தேன்” என இப்போதே தனது நெருங்கிய வட்டாரங்களில் புலம்பத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. இதனால், இவர்கள் இருவரையும் சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவந்து வாக்குமூலங்களைப் பெற்றால், நேரடியாக உதயநிதியைச் சுற்றிக் கோட்டை கட்டலாம் என்ற அரசியல் கணக்கோடு இந்த ஆபரேஷன் நகர்த்தப்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in