BREAKING : ED விசாரணைக்கு எதிராக தொடர்ந்த வழக்கைத் திரும்பப் பெற்றார் கல்வியாளர் ஐசரி கணேஷ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING : ED விசாரணைக்கு எதிராக தொடர்ந்த வழக்கைத் திரும்பப் பெற்றார் கல்வியாளர் ஐசரி கணேஷ்..!!

Published

on

வேல்ஸ் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு அத்தியாவசியச் சான்றிதழ் பெற, முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் புகாரில், கல்வியாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கைத் தற்போது ஐசரி கணேஷ் திரும்பப் பெற்றுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த மூல வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, தற்போதைய சூழலில் இந்த மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்குமாறு ஐசரி கணேஷ் கோரியதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் அவரது மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in