செம ஸ்பீடுப்பா… பிறந்த 2-வது நாளில் பெயர்… 13-வது நாளில் பாஸ்போர்ட்… உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற குட்டி பாப்பா..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செம ஸ்பீடுப்பா… பிறந்த 2-வது நாளில் பெயர்… 13-வது நாளில் பாஸ்போர்ட்… உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற குட்டி பாப்பா..!!!

Published

on

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரத்தைச் சேர்ந்த ஆஷிஷ் மற்றும் ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த கீதாமாதுரி தம்பதி, வேலை நிமித்தமாக லண்டனில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மே 30ஆம் தேதி ராஜமகேந்திரவரத்தில் பெண் குழந்தை பிறந்தது. லண்டனுக்குப் பயணம் செய்வதற்காக, பிறந்து இரு நாட்களிலேயே குழந்தைக்கு ‘அகஸ்யா பிரின்ஸி’ எனப் பெயரிட்டு பிறப்புச் சான்றிதழ் பெறப்பட்டது.

தொடர்ந்து ஜூன் 2ஆம் தேதி ஆதார் அட்டைக்கும், ஜூன் 6ஆம் தேதி பாஸ்போர்ட்டுக்கும் விண்ணப்பிக்கப்பட்டது. குழந்தையின் ஆதார் அட்டைக்கு ஜூன் 4ஆம் தேதியும், பாஸ்போர்ட்டுக்கு ஜூன் 12ஆம் தேதியும் ஒப்புதல் கிடைத்தது.

Advertisement

இதன் மூலம் பிறந்து வெறும் 13 நாட்களிலேயே பாஸ்போர்ட் பெற்ற அகஸ்யா பிரின்ஸ், சர்வதேச சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இதற்கு முன்பு 19 நாள் குழந்தை ஒருவர் மிகக் குறைந்த வயதில் பாஸ்போர்ட் பெற்ற சாதனையைப் படைத்திருந்த நிலையில், அகஸ்யா பிரின்ஸி அந்தச் சாதனையை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in