நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா..? யாரைப் பார்த்து மிரட்டுற..? உனக்கு தைரியம் இருந்தா அந்த பைல் வெளியீடு பாக்கலாம்… CM விஜய்யை ஒருமையில் பேசிய ஆர்.எஸ் பாரதி… தமிழக அரசியலில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா..? யாரைப் பார்த்து மிரட்டுற..? உனக்கு தைரியம் இருந்தா அந்த பைல் வெளியீடு பாக்கலாம்… CM விஜய்யை ஒருமையில் பேசிய ஆர்.எஸ் பாரதி… தமிழக அரசியலில் பரபரப்பு..!!

Published

on

“நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா? யாரைப் பார்த்து மிரட்டுகிறாய்? உனக்கு தைரியம் இருந்தால் அந்த ஃபைல்களை வெளியிடு” என்று தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை ஒருமையில் பேசி திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி பகிரங்க சவால் விடுத்துள்ளார். “நீ அந்தப் பூச்சாண்டி மூட்டையின் கட்டை அவிழ்த்தால், நாங்கள் அதற்குப் போட்டியாக ஒரு பெரிய லிஸ்ட்டையே வெளியில் விடுவோம்” என்றும், தவெக தரப்பிலிருந்து வரும் அரசியல் மிரட்டல்களுக்கு திமுக எக்காலத்திலும் அஞ்சாது என்றும் அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

தொகுதி மறுவரையறை விவகாரம் மற்றும் டெல்லி சந்திப்பைத் தொடர்ந்து, தவெக மற்றும் திமுக இடையே அரசியல் ரீதியான வார்த்தைப்போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில் சட்டப்பேரவையில் திமுகவின் கடந்த கால ஆட்சிக் கோப்புகள் தனது டேபிளில் இருப்பதாகவும், பல ஊழல்கள் இருப்பதாகவும் அதை வெளியிட வைத்து விடாதீர்கள் என்று முதல்வர் விஜய் மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்ட சூழலில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஆர்.எஸ்.பாரதி இத்தகைய கடுமையான மற்றும் ஆக்ரோஷமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.

Advertisement

முதலமைச்சர் என்றும் பாராமல் நாட்டின் மிக உயரிய பதவியில் இருக்கும் ஒருவரை, ஆர்.எஸ்.பாரதி பொதுமேடையில் “நீ, வா” என்று ஒருமையில் ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்திருப்பது தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய தரம் தாழ்ந்த ஒருமைப் பேச்சுக்கு தவெக தொண்டர்கள் மற்றும் பல்வேறு அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன.


Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in