LATEST NEWS
“என் நண்பனுக்கே அனுமதி இல்லையா..?” சலுகையைத் தூக்கியெறிந்த முதல்வர் விஜய்… விமான நிலையத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி..!!
தமிழக முதல்வர் விஜய், மாநிலத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டனுக்குத் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குழுவாகச் சென்றுள்ளனர். நேற்று சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அவர், வரும் 17-ஆம் தேதி மீண்டும் தமிழகம் திரும்பத் திட்டமிட்டுள்ளார்.
முக்கிய பிரமுகர்களுக்காக விமான நிலையத்தில் உள்ள பிரத்யேக ‘விஐபி கேட்’ வழியைப் பயன்படுத்த முதல்வருக்குச் சிவில் விமான போக்குவரத்து பணியகம் அனுமதி அளித்திருந்தது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களைக் சுட்டிக்காட்டி அவரது ஆலோசகர் விஷ்ணு ரெட்டிக்கு அந்த வழியில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
தன்னுடன் வரும் ஆலோசகரைத் தவிர்த்துவிட்டுத் தான் மட்டும் தனி சலுகையைப் பயன்படுத்த முதல்வர் விஜய் விரும்பவில்லை. இதனால் தனக்கு வழங்கப்பட்ட விஐபி கேட் வசதியை அவர் உடனடியாகப் புறக்கணித்தார்.
இதையடுத்து அதிகாரிகள் அவசர கால வழியான ‘டி9’ கேட் மூலமாக முதலமைச்சர் மற்றும் அவரது குழுவினரை விமான நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். பொதுமக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
