LATEST NEWS
முதலமைச்சர் விஜய் மேசைக்கு வந்த ரகசிய கோப்பு.. கைதுக்கு பயந்து தஞ்சம் அடைந்த மாஜி அமைச்சர்…? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!
கடந்த ஆட்சியில் கோடிக்கணக்கில் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் ஒருவரின் ரகசிய ஆவணங்கள் மற்றும் கோப்புகள், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் மேசைக்கு வந்து சேர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறைகேடுகள் தொடர்பாக முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. முந்தைய ஆட்சிக்காலத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பல்வேறு துறைகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சருக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், முன்னாள் அமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவரும், அவரது சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளுக்குத் துணை நின்றவருமான முக்கியப் புள்ளி ஒருவர் சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செய்த முறைகேடுகள் குறித்த முழு விவரங்களும், லஞ்சப் பணப் பரிமாற்றம் தொடர்பான முக்கிய ஆவணங்களும் ஆதாரங்களுடன் தற்போதைய முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கைது நடவடிக்கையில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், தன் மீதான வழக்குகளை நீர்த்துப்போகச் செய்யவும் அந்த முன்னாள் அமைச்சர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக முதலமைச்சர் விஜய்யின் நெருக்கமான வட்டாரத்தில் உள்ள ஒருவரை அணுகி ‘அண்டர் டீலிங்’ செய்ய முயன்றதாகவும், ஆனால் அதற்கு முதலமைச்சர் கடுமையான முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தன்னைச் சந்திக்க முயன்ற முன்னாள் அமைச்சரிடம், ‘ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள்’ என முகத்திற்கு நேராகத் தெரிவித்து முதலமைச்சர் திருப்பி அனுப்பிவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
