“அங்கிள்ன்னு சொன்னப்ப இனிச்சதோ.. தம்பி விஜய் என்ற ஸ்டாலின்.. இரிட்டேட் ஆன தவெக தலைகள்… திமுக-தவெக இடையே வெடித்த மோதல்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அங்கிள்ன்னு சொன்னப்ப இனிச்சதோ.. தம்பி விஜய் என்ற ஸ்டாலின்.. இரிட்டேட் ஆன தவெக தலைகள்… திமுக-தவெக இடையே வெடித்த மோதல்…!!

Published

on

முதலமைச்சர் விஜய்யை, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வீடியோ அறிக்கையில் “தம்பி விஜய்” என்று அழைத்துப் பேசியது தவெக தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தில் மிசா சிறைவாசம் குறித்து விஜய் பேசியதற்குப் பதிலளித்த ஸ்டாலின், “முதலமைச்சரானதும் என்னைச் சந்திக்க வந்தபோது, பிரச்சாரத்தில் விமர்சித்ததற்கு மன்னிப்பு கேட்டீர்கள். அதற்கு நான் பரவாயில்லை பிரதர், இனி கண்ணியத்தோடு பேசுங்கள் என்று அறிவுறுத்தினேன். ஆனால், ஆட்சியை சினிமா ஷூட்டிங் போல மாற்றிவிட்டீர்கள். தம்பி விஜய்… ஒரு முதலமைச்சருக்கான கண்ணியத்தோடு நடந்துகொள்ளுங்கள்” என விமர்சித்திருந்தார்.

ஸ்டாலினின் இந்த அறிக்கையில் அவர் பயன்படுத்திய “தம்பி விஜய்” என்ற வார்த்தைப் பிரயோகமே தவெகவினரை மிகவும் கொதிப்படையச் செய்துள்ளது. “அரசியல் ரீதியான விமர்சனங்களை ஏற்கலாம், ஆனால் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவரை ‘தம்பி’ எனப் பொதுவெளியில் அழைப்பது அதிகாரத் தோரணையும், அரசியல் நாகரிகமற்ற செயலும் ஆகும்” என தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

தவெகவினரின் இந்த எதிர்ப்புக்கு திமுக தரப்பும் உடனே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. “தேர்தல் பிரச்சார மேடைகளில் அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலினை, ‘ஸ்டாலின் அங்கிள்… ஸ்டாலின் அங்கிள்…’ என்று விஜய் ஏளனமாக விமர்சித்தபோது இந்த அரசியல் நாகரிகம் எங்கே போனது? அன்று உங்களது காதுகளுக்கு அது இனிப்பாக இருந்ததா?” என்று திமுக ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி இணையத்தில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர்.

மேலும், வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான ஸ்டாலின் பண்போடு ‘தம்பி’ என்று அழைத்ததில் எந்தத் தவறும் இல்லை என்றும், அன்று ‘அங்கிள்’ என கிண்டல் செய்தவர்கள் இன்று ‘தம்பி’ என்ற சொல்லுக்கு இவ்வளவு பதறுவது ஏன் என்றும் திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in