LATEST NEWS
இன்னைக்கு விஜய்க்கு இருக்கிற திமிர் மாதிரிதான்… அன்னைக்கு ஜெ., க்கு இருந்துச்சு.. கடைசியில அந்தம்மாவுக்கு என்ன நடந்துச்சு..? முதல்வர் குறித்து ஆர்.எஸ் பாரதி சர்ச்சை..!!
“இன்னைக்கு விஜய்க்கு இருக்கிற திமிர் மாதிரிதான் அன்னைக்கு ஜெயலலிதாவுக்கும் இருந்தது; கடைசியில் அந்த அம்மாவுக்கு என்ன நடந்துச்சு?” என்று திமுகவின் மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை விமர்சிக்கும் தொனியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் வீழ்ச்சி மற்றும் இறுதி நாட்களை ஒப்பிட்டு அவர் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு மாறாக, டெல்லி சென்று வந்த பிறகு தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் பல்டி அடித்துள்ளதாக திமுகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தச் சூழலில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, அதிகாரத் திமிரோடு செயல்படுபவர்கள் அரசியலில் நிலைக்க முடியாது என்பதை எச்சரிக்கும் விதமாகவே ஜெயலலிதாவின் வரலாற்றை உதாரண காட்டியதாகத் தெரிகிறது.
இருப்பினும், மறைந்த ஒரு பெண் தலைவரின் மரணம் மற்றும் அவரது இறுதி நாட்களை அநாகரிகமான முறையில் ஒப்பிட்டுப் பேசியதற்கு அதிமுக மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆர்.எஸ்.பாரதி தனது இந்த சர்ச்சைக்குரிய பேச்சிற்காக உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், முதலமைச்சர் விஜய்யை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் திமுகவினர் தரம் தாழ்ந்து விமர்சிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
