“இது என்னடா கூத்தா இருக்கு..!” எங்க அம்மா சாக்லெட்டைப் பிடுங்கிட்டாங்கா… போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த குட்டிப்பையன்.. .. நெட்டிசன்களைச் சிரிக்க வைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இது என்னடா கூத்தா இருக்கு..!” எங்க அம்மா சாக்லெட்டைப் பிடுங்கிட்டாங்கா… போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த குட்டிப்பையன்.. .. நெட்டிசன்களைச் சிரிக்க வைக்கும் வீடியோ..!!

Published

on

பெற்றோர்கள் கண்டிப்பதையும், தங்களுக்குப் பிடித்த சாக்லேட்டுகளைப் பறிப்பதையும் இன்றைய தலைமுறை குழந்தைகள் தங்களின் மனித உரிமை மீறலாகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். ஒரு சிறிய சாக்லேட்டுக்காகக் குழந்தை காவல் நிலையம் வரை சென்றதை நினைத்தால் வியப்பாகவும், நகைச்சுவையாகவும் இருக்கிறது. அங்குள்ள காவல் அதிகாரியும் ஒரு டைரியை வைத்துக்கொண்டு, “சொல்லுங்க கண்ணா, அது என்ன சாக்லேட்? எத்தனை முறை உங்களை இப்படி சித்திரவதை செய்தார்கள்?” என்று தீவிரமாக விசாரிப்பது போன்றதொரு சூழல் இன்று உருவாகியுள்ளது.

मम्मी ने छीन ली चॉकलेट तो थाने पहुंचा बच्चा

अब घर में मम्मी का डांटना या चॉकलेट छीनना ममता नहीं, बल्कि सीधे मानवाधिकार हनन की श्रेणी में आता है…

पहले के समय में बच्चे माता-पिता के डांटने या किसी चीज के न मिलने पर रोकर या जिद करके शांत हो जाते थे…लेकिन आज की पीढ़ी अपने…— Felza Pathan (@Firozakpathan) August 14, 2026

இதே நிலை நீடித்தால், நாளை தங்களுக்கு நேரத்திற்குப் பால் தராததற்காக உச்ச நீதிமன்றத்தில் இந்தக் குழந்தைகள் பொதுநல வழக்குத் தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. முந்தைய காலங்களில் அம்மா திட்டினாலோ அல்லது திண்பண்டங்களை தராவிட்டாலோ குழந்தைகள் அழுது, அடம்பிடித்து அமைதியாகிவிடுவார்கள். ஆனால், தற்போதைய டிஜிட்டல் உலகக் குழந்தைகள் தங்கள் உரிமைகளைப் பற்றி மிகத் தெளிவாகவும், பயமின்றியும் இருக்கிறார்கள். வீட்டில் தங்களின் பேச்சைக் கேட்கவில்லை என்றால், நியாயம் கேட்க எங்கு செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வும் அவர்களிடம் அதிகமாகவே உள்ளது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in