CRIME
அடக் கொடுமையே.. ஆட்டோவில் ஏறிய பயணிக்கு நேர்ந்த கொடூரம்.. பயணிகள் வேடத்தில் வந்த கொள்ளையர்கள் செய்த அதிரடி காரியம்.. பரபரப்பு பின்னணி..!!
வங்காளதேசத்தின் பிஷ்வரோடு பகுதியிலிருந்து பிராமண்பாரியா நோக்கி சிஎன்ஜி ஆட்டோவில் பயணம் செய்த நபர் ஒருவர், மறைந்திருந்த கொள்ளையர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் போல வேடமணிந்து ஆட்டோவில் இருந்த அந்த சமூக விரோதிகள், ஓடும் ஆட்டோவிலேயே அந்த நபரை மிரட்டி அவரிடமிருந்த பணத்தைப் பறித்துள்ளனர்.
அதோடு நிறுத்தாமல், கொள்ளையர்கள் அந்த நபரின் கைகளையும் கால்களையும் சணல் கயிறுகளால் கட்டி, இரவு 10 மணியளவில் சுஹில்பூர் என்ற இடத்திற்கு அருகே சாலையோரம் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். அந்த வழியாகச் சென்ற உள்ளூர் பொதுமக்கள், ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் கட்டப்பட்ட நிலையில் கிடந்த அந்த நபரை மீட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
