நள்ளிரவில் பயங்கரம்…! மூதாட்டியின் காதை அறுத்து 11 சவரன் தங்கம் துணிகரக் கொள்ளை… விருதுநகரில் பயங்கரம்..!!! – cinefeeds
Connect with us

CRIME

நள்ளிரவில் பயங்கரம்…! மூதாட்டியின் காதை அறுத்து 11 சவரன் தங்கம் துணிகரக் கொள்ளை… விருதுநகரில் பயங்கரம்..!!!

Published

on

விருதுநகர் மாவட்டம் அ.முக்குளம் அருகே உள்ள பாண்டியன்கோட்டையில், நள்ளிரவில் 82 வயது மூதாட்டியைக் கொடூரமாகத் தாக்கி 11 சவரன் தங்கத் தண்டட்டி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனியாக இருந்த முத்துக்கருப்பாயி என்ற மூதாட்டியைக் குறிவைத்து இந்தத் துணிகரக் கொள்ளை அரங்கேறியுள்ளது.

நள்ளிரவு நேரத்தில் மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த நகையைப் பறிக்க முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மூதாட்டியின் காதை அறுத்த கொள்ளையர்கள், அவர் அணிந்திருந்த 11 சவரன் மதிப்புள்ள தங்கத் தண்டட்டியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

Advertisement

இச்சம்பவத்தில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டி முத்துக்கருப்பாயி உடனடியாக மீட்கப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் துணிகரக் கொள்ளை குறித்துப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in