“ஐயோ.. கிழ விழப்போகுதே..” தகரகூரையில் உச்சியில் மரண பயம் காட்டிய 3 வயது குழந்தை.. நொடிப் பொழுதில் பாய்ந்து உயிரைக் காத்த ரியல் ஹீரோ.. வைரலாகும் திகில் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ.. கிழ விழப்போகுதே..” தகரகூரையில் உச்சியில் மரண பயம் காட்டிய 3 வயது குழந்தை.. நொடிப் பொழுதில் பாய்ந்து உயிரைக் காத்த ரியல் ஹீரோ.. வைரலாகும் திகில் வீடியோ..!!

Published

on

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அலநல்லூரில், உயிருக்கு ஆபத்தான நிலையில் கூரை மீது தொங்கிக்கொண்டிருந்த 3 வயது குழந்தையை இளைஞர் ஒருவர் சாதுரியமாக மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினரின் 3 வயது குழந்தை, வீட்டில் இருந்த சாக்கு மூட்டைகளின் மீது ஏறி, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த தகரக் கூரையின் மேல் சென்றுள்ளது. கூரையின் விளிம்பில் குழந்தை மிகவும் ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள், என்ன செய்வதென்று தெரியாமல் பதற்றமடைந்தனர்.

அந்தத் தங்கி நின்ற ஆபத்தான தருணத்தில், அங்கிருந்த ஷியாபுதீன் என்ற இளைஞர் சற்றும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, கூரையின் மீது ஏறி குழந்தையைப் பத்திரமாக மீட்டார். நெஞ்சை பதறவைக்கும் இந்த மீட்புச் சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் குழந்தையைக் காப்பாற்றிய ஷியாபுதீனுக்குப் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களது பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in