CRIME
‘அடச்சீ.. சொந்த மாமாவே செய்த கொடூரம்..” 6 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்.. கையும் களவுமாகப் பிடித்து பொதுமக்கள் செய்த காரியம்.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!
வங்காளதேசத்தின் பிராமண்பாரியா பகுதியில், 6 வயது சிறுமி ஒருவர் அவரது சொந்த மாமாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்குற்றத்தைச் செய்த நபரைப் பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர். எனினும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை பொதுமக்களிடமிருந்து மீட்டு, தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த கொடூரமான செயல் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தால் நிலைகுலைந்து போயுள்ள அச்சிறுமியின் தாய்மாமா, தங்களுக்கு நீதியின் மீது நம்பிக்கை இல்லை என்றும், தங்கள் சொந்த உறவினராகவே இருந்தாலும் அந்த நபரை தாங்களே தண்டிக்க விரும்புவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், அந்த நபர் சிறு வயது முதலே போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாகவும், அதை சுற்றியிருந்த யாரும் தடுத்து நிறுத்த முயலவில்லை என்பதால் அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய கொடூரமான குற்றங்கள் நடக்கும்போது சட்டத்தைக் கையில் எடுப்பது தவறாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களின் நியாயமான கோபத்தை உணர முடிகிறது எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
