LATEST NEWS
“அடேங்கப்பா.. கொடுத்துவஞ்சவன்.. ” 21 கல்யாணம் செய்த பிச்சைக்காரர்.. வாயடைத்துப் போன நெட்டிசன்கள்.. இணையத்தைக் கலக்கும் வங்காளதேசத்து மன்மதன்..!!
வங்காளதேசத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் தனக்கு 21 மனைவிகள் இருப்பதாகக் கூறியுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருவதோடு, இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பெண்கள் பலரே தாங்களாகவே முன்வந்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ஆசையுடன் கேட்டுக் கொண்டதாகவும், அவர்களின் கோரிக்கையை மறுக்க மனம் இல்லாமல் தான் அவர்கள் அனைவரையும் வரிசையாகத் திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் அந்த வீடியோவில் விசித்திரமாகக் கூறியுள்ளார்.
மேலும், அந்தப் பெரிய குடும்பத்தை வழிநடத்த அவர் கையாண்டு வரும் ஒரு விசித்திரமான உத்தியும் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அவர் தினமும் ஒரு மனைவியை வீதம் சுழற்சி முறையில் தன்னுடனே பிச்சை எடுப்பதற்காக வெளியே அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வறுமையில் வாடி பிச்சை எடுக்கும் ஒருவருக்கு 21 மனைவிகள் இருக்கும் இந்த வினோதமான கதை தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி, பலதரப்பட்ட வேடிக்கையான கமெண்ட்டுகளுடன் பரவி வருகிறது.
