அச்சச்சோ.. தொழிற்சாலை மாடியில் நின்ற அதிகாரி… அடுத்த நொடியே நடந்த விபரீதம்.. அலறியடித்து ஓடிய சக ஊழியர்கள்.. இணையத்தில் வெளியாகி அதிரவைத்த பகீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

அச்சச்சோ.. தொழிற்சாலை மாடியில் நின்ற அதிகாரி… அடுத்த நொடியே நடந்த விபரீதம்.. அலறியடித்து ஓடிய சக ஊழியர்கள்.. இணையத்தில் வெளியாகி அதிரவைத்த பகீர் வீடியோ..!!

Published

on

வங்காளதேசத்தின் அசுலியா, நரசிங்பூர் பகுதியில் உள்ள ஷா மின் குரூப் ஆடைத் தொழிற்சாலையில் நேற்று ஒரு நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிறுவனத்தின் மூத்த வணிகப் பிரிவு அதிகாரி ஜமால் உதீன் என்பவர், தொழிற்சாலை கட்டிடத்தின் கூரையிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்தத் துயரச் சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

தொழிற்சாலையின் அவசரப் பணியின் போது, சக ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் கண் முன்னாலேயே இந்தத் தற்கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆடைத் தொழிற்சாலையில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடுமையான பணிச்சுமை அல்லது நிர்வாக ரீதியிலான மன அழுத்தம் காரணமாகவே அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த அசுலியா காவல்துறையினர், ஜமால் உதீனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், தற்கொலைக்கான உண்மைப் பின்னணி குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in