CRIME
“என் பேத்தி மேல கையை வச்ச உன்னை சும்மா விடமாட்டேன்” நடுரோட்டில் அரிவாளுடன் பாலியல் குற்றவாளியை ஓட ஓட விரட்டி வெட்டிய பாட்டி.. கரூரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!!
கரூர் மாவட்டம் குளித்தலையில் 4 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த மாணிக்கம் (31) என்பவரை, பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி நடுரோட்டில் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பேத்திக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து ஆத்திரமடைந்த அந்தப் பாட்டி, தலைமறைவாக இருந்த குற்றவாளியைத் தேடிப் பிடித்துள்ளார். அவரைப் பார்த்ததும் ஆவேசமடைந்து, கையில் வைத்திருந்த அரிவாளால் நடுரோட்டிலேயே ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார்.
இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்களும் உடனடியாகச் செயல்பட்டு, தப்பியோட முயன்ற மாணிக்கத்தை வளைத்துப் பிடித்துத் தர்மஅடி கொடுத்தனர். பின்னர், கைகால்களைக் கட்டி அவரை இழுத்துச் சென்று குளித்தலை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த அந்த நபருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
