CRIME
“உன் கணவனுக்கு அனுப்பிவிடுவேன்..” பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பாட்னர்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
தெலுங்கானா மாநிலம் ராயதுர்கத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், கூட்டுத் தொழில் தொடங்க அறிமுகமான ஷேக் நபி என்பவருடன் சேர்ந்து ஓட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதற்காக அந்தப் பெண் நபியிடம் ரூ.43 லட்சம் வழங்கிய நிலையில், தொழில் நல்ல லாபத்துடன் இயங்கியதால் கடந்த 2023-ம் ஆண்டு அதன் அருகில் பாக்ஸ் கிரிக்கெட் போட்டி மைதானம் ஒன்றையும் அவர்கள் அமைத்துள்ளனர். இதன் தொடக்க விழா மது விருந்தின் போது, நபி அந்தப் பெண்ணுக்குப் போதை மருந்து கலந்த குளிர்பானத்தைக் குடிக்கக் கொடுத்துள்ளார். பெண் மயங்கியதும் அவரைத் தனி அறைக்குத் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ததோடு, அதனைத் தனது செல்போனில் ஆபாச வீடியோவாகவும் ரகசியமாகப் படம் பிடித்துள்ளார். மறுநாள் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்தப் பெண் தட்டிக்கேட்டபோது, அந்த ஆபாச வீடியோக்களைக் காட்டி, தனது விருப்பத்திற்கு இணங்கவில்லை என்றால் கணவர், குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவதாக நபி மிரட்டியுள்ளார்.
இந்த ஆபாச வீடியோ மிரட்டலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட நபி, கடந்த 3 ஆண்டுகளாக அந்தப் பெண்ணைத் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். நாளுக்கு நாள் அவனது பாலியல் துன்புறுத்தல்களும் அச்சுறுத்தல்களும் எல்லை மீறி அதிகரித்ததால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், இறுதியாகத் துணிச்சலுடன் இந்தச் சம்பவம் குறித்துத் தனது கணவரிடம் உண்மைகளைக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர்கள் ராயதுர்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளியான ஷேக் நபியை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
