பெத்த மனசு கல்லா போச்சா..? பெற்ற மகளை ரயிலில் வீசிய அரசு ஊழியர் தாய்… நெஞ்சை உலுக்கும் ரயில் நிலைய கொடூரம்.. நடந்தது என்ன..? சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பெத்த மனசு கல்லா போச்சா..? பெற்ற மகளை ரயிலில் வீசிய அரசு ஊழியர் தாய்… நெஞ்சை உலுக்கும் ரயில் நிலைய கொடூரம்.. நடந்தது என்ன..? சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் ரயில் நிலையத்தில் 8 வயது சிறுமிக்கு நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையத்தில் சுமார் மூன்றரை மணி நேரமாகத் தனது மகளுடன் சுற்றித் திரிந்த தாய், இருட்டிய பிறகு அணைத்து அணைத்து வளர்த்த பெற்ற குழந்தையையே ஓடும் ரயில் முன் வீசியுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் முன் வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த சிறுமி, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வரும் நிலையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

சம்பந்தப்பட்ட பெண் வேளாண்மைத் துறையில் எழுத்தராகப் பணியாற்றி வருவதும், கணவரின் மறைவுக்குப் பிறகு அவருக்கு இந்த வாரிசு வேலை கிடைத்தது என்பதும் தெரியவந்துள்ளது. எந்தத் தவறும் அறியாத ஒரு சிறுமிக்கு இப்படி ஒரு கொடுமை நிகழ என்ன காரணம் என்பது குறித்துக் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள முழு உண்மையும் வெளிக்கொண்டு வரப்பட்டு, குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in