LATEST NEWS
“அடப்பாவமே.. கூல்டிரிங்க்ஸ் குடிச்சா உயிருக்கே ஆபத்தா..?” 1.5 லிட்டர் கோகோ-கோலாவை ஒரே மூச்சுல குடிச்ச இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!
பெய்ஜிங்கில் வெப்பத்தைத் தணிப்பதற்காக வெறும் 10 நிமிடங்களில் 1.5 லிட்டர் கோகோ-கோலாவைக் குடித்ததைத் தொடர்ந்து பரிதாபமாக 22 வயது இளைஞர் மரணமடைந்துள்ளார். வெப்பத்தைத் தணிக்க எடுத்த வேகம், அவரது உயிரைப் பறித்த சோகமான சம்பவமாக மாறியுள்ளது.
குளிர்பானத்தை விரைவாகக் குடித்ததால் அவரது வயிற்றில் கடுமையான வீக்கமும், ஆபத்தான அளவில் வாயுத் தேக்கமும் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்து 6 மணி நேரம் கழித்து அவர் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், உடல்நிலை மேலும் மோசமடைந்து, 18 மணி நேரத்திற்குப் பிறகு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
