“நான் விஷம் குடிச்சுட்டேன்” விஷப் பாட்டிலைப் படம் பிடித்து காதலிக்கு அனுப்பிய காதலர்.. போனில் அலறிய காதலி… அடுத்த நொடியே நடந்த பயங்கர ம்…!! – cinefeeds
Connect with us

CRIME

“நான் விஷம் குடிச்சுட்டேன்” விஷப் பாட்டிலைப் படம் பிடித்து காதலிக்கு அனுப்பிய காதலர்.. போனில் அலறிய காதலி… அடுத்த நொடியே நடந்த பயங்கர ம்…!!

Published

on

பீகார் மாநிலம் தர்பங்கா பகுதியைச் சேர்ந்த அஷ்ரஃப் என்ற இளைஞர், பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர்களின் காதல் உறவில் விரிசல் ஏற்பட்டு, இருவருக்கும் இடையே தகராறு மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அஷ்ரஃப், விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ளும் அதிர்ச்சிகரமான முடிவை எடுத்தார்.

விஷம் அருந்துவதற்கு முன்பாக, தான் குடிக்கவிருந்த விஷப் பாட்டிலைப் புகைப்படம் எடுத்துத் தனது காதலிக்கு வாட்ஸ்அப் (WhatsApp) செயலி மூலம் அஷ்ரஃப் அனுப்பியுள்ளார். மேலும், விஷம் அருந்திய உடனேயே காதலியைத் தொலைபேசியில் அழைத்துத் தான் விஷம் குடித்துவிட்டதாகக் கூறிப் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காதலி மற்றும் குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

Advertisement

இருப்பினும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அஷ்ரஃப் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள உள்ளூர் காவல்துறையினர், அஷ்ரஃபின் செல்போன், வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் புகைப்படங்களைக் கைப்பற்றி, காதல் முறிவிற்கான காரணம் என்ன என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in