LATEST NEWS
“காதலா… பெற்ற பாசமா..?!” காதலனின் கையைப் பிடித்தபடி நின்ற மகள்.. ரயில் நிலையத்தில் ஓடிவந்த தந்தை.. இறுதியில் நடந்த அல்டிமேட் ட்விஸ்ட்.. இணையத்தை கண்கலங்க வைத்த சம்பவம்..!!
காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப்போக முயன்ற இளம் பெண் ஒருவரை, ரயில் நிலையத்தில் வைத்து அவரது பெற்றோர்கள் கண்டுபிடித்துத் தடுத்து நிறுத்தினர். தாய் மற்றும் தந்தை இருவரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் புரியவைக்க முயன்றும், அந்தப் பெண் அவர்களின் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை. இதனால் மனம் உடைந்த தந்தை, கண்ணீருடன், “நீ என்னுடன் இருக்க விரும்பவில்லை என்றால் பரவாயில்லை, நீ சந்தோஷமாக இரு… இன்றிலிருந்து உனது சொந்த முடிவுகளை நீயே எடுத்துக்கொள்” என்று கூறிவிட்டு அங்கிருந்து மனவேதனையுடன் நகரத் தொடங்கினார்.
एक लड़की अपने BF के साथ घर से भाग रही थी, तभी उसके माता पिता रेलवे स्टेशन पहुंच गए
मां बाप ने बेटी को बहुत समझाया, लेकिन वह उनकी बात मानने को तैयार नहीं थी
पिता ने रोते हुए कहा अगर मेरे साथ नहीं रहना है तो खुश रहो, आज से तुम अपने फैसले खुद लेना
यह कहकर पिता वहां से जाने लगे,… pic.twitter.com/Tkda8ZeGqJ— Ayesha Majid Khan (@Ayesha786Majid) August 7, 2026
தந்தையின் இந்தக் உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகளும் அவரது கண்ணீரும் மகளின் மனதை ஆழமாகத் தொட்டன. தந்தை சில அடிகள் நடந்து சென்றவுடனேயே, தன் தவறை உணர்ந்த அந்தப் பெண் காதலனை விட்டுவிட்டுத் தந்தையின் பின்னால் ஓடிச் சென்றார். பெற்றோரின் உண்மையான அன்பைப் புரிந்து கொண்ட அந்தப் பெண், காதலனுடன் செல்லும் முடிவைக் கைவிட்டு, மீண்டும் தன் குடும்பத்துடனே வீட்டிற்குச் செல்லச் சம்மதித்தார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அங்கிருந்த அனைவரையும் உருக வைத்தது.
