ஐயோ கொடுமையே… இவன்லாம் ஒரு மனுஷனா… 2000 ரூபாய்க்கு டீசல் போட்டுட்டு காசு கேட்டதால்… பெட்ரோல் பங்க் ஊழியரை காரில் 5 KM தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்… சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஐயோ கொடுமையே… இவன்லாம் ஒரு மனுஷனா… 2000 ரூபாய்க்கு டீசல் போட்டுட்டு காசு கேட்டதால்… பெட்ரோல் பங்க் ஊழியரை காரில் 5 KM தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்… சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டம் பில்குவா பகுதியில் உள்ள தில்லி-லக்னோ நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் அகர்வால் ஃபூயலிங் ஸ்டேஷன் என்ற பெட்ரோல் பங்ககில் செப்டம்பர் 2-ஆம் தேதி இரவு 10 மணியளவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பெட்ரோல் பங்கிற்கு வந்த ஒரு கருப்பு நிற ஸ்கார்பியோ காரின் ஓட்டுநர், அங்கிருந்த பங்க் ஊழியரான பங்கஜ் என்பவரிடம் ரூ.2,000 மதிப்பிலான டீசலை நிரப்புமாறு கூறியுள்ளார்.

டீசல் நிரப்பிய பிறகு, பங்கஜ் அதற்கான பணத்தைக் கேட்டபோது, ஆத்திரமடைந்த ஓட்டுநர் அவரை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். தொடர்ந்து, பங்கஜின் கையை காரின் சன்னல் கண்ணாடியின் இடுக்கில் இறுக்கமாகப் பூட்டிப் பிடித்துக்கொண்டு, காரை ஹாபூர் நோக்கிய திசையில் அதிவேகமாக இயக்கிச் சென்றுள்ளார். சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் ஊழியர் பங்கஜை காரிலேயே இழுத்துச் சென்ற ஓட்டுநர், பின்னர் நிஜாம்பூர் திராஹா பகுதிக்கு அருகில் அவரைச் சாலையில் தூக்கி வீசிச் சென்றுள்ளார். இந்த கொடூரச் சம்பவம் பெட்ரோல் பங்ககில் இருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.

Advertisement

இதுகுறித்து அந்த பெட்ரோல் பங்கின் மேலாளரும், காசியாபாத் ஆகாஷ் நகரைச் சேர்ந்தவருமான நீரஜ் சவுகான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மீரட் மாவட்டம் லலியானா பகுதியைச் சேர்ந்த ஃபரியாத் (Fariyad) என்பவரைக் கைது செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கோட்வாலி இன்சார்ஜ் மனோஜ் பலியான் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in