அடச்ச.. இவளாம் ஒரு டீச்சரா… ஸ்கூலுக்கு அனுப்புறதுக்கே பயமா இருக்குப்பா.. மார்க் கம்மியானதால் மாணவர்களை ரத்தம் வர லத்தியால் அடித்த ஆசிரியை… முதுகில் காயங்களைப் பார்த்து கதறி அழுத பெற்றோர்..! கர்நாடகா பள்ளியில் அரங்கேறிய கொடூரச் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடச்ச.. இவளாம் ஒரு டீச்சரா… ஸ்கூலுக்கு அனுப்புறதுக்கே பயமா இருக்குப்பா.. மார்க் கம்மியானதால் மாணவர்களை ரத்தம் வர லத்தியால் அடித்த ஆசிரியை… முதுகில் காயங்களைப் பார்த்து கதறி அழுத பெற்றோர்..! கர்நாடகா பள்ளியில் அரங்கேறிய கொடூரச் சம்பவம்..!!

Published

on

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம், சாகரா தாலுகா, துமாரி கிராம பஞ்சாயத்தில் உள்ள கிருவாசே தொடக்கப் பள்ளியில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவைச் சீர்குலைக்கும் வகையில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. இங்குப் பணியாற்றி வந்த ரக்சிதா என்ற பகுதிநேர ஆசிரியை, தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததற்காக 2, 3 மற்றும் 4-ஆம் வகுப்பு படிக்கும் மூன்று சிறுவர்களை லத்தியால் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியை, சிறுவர்களின் முதுகில் ரத்தம் வரும் வரை தொடர்ந்து அடித்துள்ளார். பள்ளி முடிந்து மாணவர்கள் அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்றபோது, அவர்களின் முதுகில் ரத்தக் காயங்களும், நீல நிறக் தழும்புகளும் இருப்பதைக் கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். விசாரித்தபோது, ஆசிரியை ரக்சிதா தங்களைக் கொடூரமாகத் தாக்கியதாகச் சிறுவர்கள் கூறியுள்ளனர். இந்தச் செய்தி பரவியதும் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்து கிருவாசே பள்ளி வளாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய நிலையில், சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது. பொதுக் கல்வித்துறை இணை இயக்குநர் எஸ்.ஆர். மஞ்சுநாத் ஆசிரியை ரக்சிதாவை பணியில் இருந்து உடனடியாக நீக்கி உத்தரவிட்டதுடன், காயமடைந்த மாணவர்களுக்குத் தகுந்த மருத்துவச் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார். மேலும், பள்ளி மாணவர்களை எக்காரணத்தைக் கொண்டும் உடலளவிலோ மனதளவிலோ துன்புறுத்தக் கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in