“அம்மா எனக்கு இனி யாரு இருக்கா..?” மழையில் நனைந்தபடி மனைவியின் சடலம்… கதறி அழுத 8 வயது மகள்… ஆம்புலன்சுக்கு காசில்லாமல் தவித்த கணவனுக்கு உதவிய மனிதாபிமான போலீஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அம்மா எனக்கு இனி யாரு இருக்கா..?” மழையில் நனைந்தபடி மனைவியின் சடலம்… கதறி அழுத 8 வயது மகள்… ஆம்புலன்சுக்கு காசில்லாமல் தவித்த கணவனுக்கு உதவிய மனிதாபிமான போலீஸ்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரியில் மனதை உலுக்கும் ஒரு மனிதாபிமானமற்ற சோகச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராகுல் ஆதிவாசி என்பவர், தனது நீண்ட நாள் நோய்வாய்ப்பட்ட மனைவி ராம்வதியை சிகிச்சைக்காக ஜான்சி மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளார். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ராம்வதி ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறி, அவரது உடலை ஸ்டிரெச்சரில் வைத்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

தன் மனைவியின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல அந்த ஏழைப் பதியிடம் போதிய பணமோ அல்லது வாகன வசதியோ இல்லாததால், மருத்துவமனை வளாகத்தில் உள்ள வாகன நிறுத்தக் கூரையின் கீழ் தஞ்சம் புகுந்தார். வெளியே பலத்த மழை பெய்து கொண்டிருக்க, மனைவியின் சடலத்தின் அருகே அந்தப் கணவன் கண்ணீருடன் அமர்ந்திருந்தார். அவர்களுடன் வந்திருந்த 8 வயது மகள் நந்தினி, தனது தாயின் சடலத்தைப் பார்த்து கதறி அழுதபடி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக யாரிடமாவது உதவி கிடைக்காதா என்ற ஏக்கத்தில் காத்திருந்தார்.

Advertisement

அந்தச் சமயம் தற்செயலாக அங்கு வந்த உத்தரப் பிரதேச காவல்துறை காவலர் ஒருவர், இந்த அவல நிலையைக் கண்டு உடனே அவர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். அவர்களிடம் பணம் இல்லாததை உணர்ந்த அந்த காவலர், தனது சொந்த முயற்சியால் இலவச ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு ஏற்பாடு செய்து, பெண்ணின் உடலை அவர்களது சொந்த ஊருக்குப் பத்திரமாக அனுப்பி வைத்தார். இந்தச் சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், ஏழைகளுக்கு இலவச வாகன வசதி உள்ளதாகவும், ஆனால் இந்த குடும்பத்தினர் தங்களை அணுகி உதவி கேட்கவில்லை என்றும் தங்களது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in