LATEST NEWS
கலிகாலம்..! ரீல்ஸ் காதலால் பூத்த திருமணம்… 2 குழந்தைகளின் தாயும், இளம் பெண்ணும் மாலை மாற்றி திருமணம்… தலையில் அடித்துக்கொள்ளும் நெட்டிசன்கள்..!!
பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தில், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சந்தியா தேவி (32) மற்றும் அவரது அண்டை வீட்டைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் ரூபி குமாரி ஆகிய இரு பெண்களும் சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்து பாரம்பரிய முறைப்படி கோயிலில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களுக்காக இணைந்து நடன வீடியோக்களை உருவாக்கியபோது இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, அங்குள்ள விந்தியவாசிணி மற்றும் ராம்ரேகா காட் கோயில்களில் மாலை மாற்றி முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணத்தில் 18 வயது ரூபி ‘மணமகன்’ உடையிலும், சந்தியா ‘மணமகள்’ அலங்காரத்திலும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே திருமணமாகி 12 மற்றும் 10 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ள ஒரு தாய், அண்டை வீட்டு இளம் பெண்ணை ஓரினச்சேர்க்கை முறையில் திருமணம் செய்துகொண்ட இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவி விவாதப் பொருளாக மாறியுள்ளது. இவர்களின் குடும்பத்தினர் இந்தத் திருமணத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து, அவர்களுக்கு மிரட்டல் விடுத்து வருவதாகக் கூறப்படும் நிலையிலும், இருவரும் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர். இச்சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பகிரப்படும் சமூக ஊடகப் பதிவுகளில், “இனி வரும் காலங்களில் ஆண்களின் தேவையே இருக்காது போல” என்ற ரீதியிலான கடுமையான கமெண்ட்டுகளும் விமர்சனங்களும் வைரலாகி வருகின்றன.
