அதிசயம்… ஆனால் 100% உண்மை..! பன்றி சிறுநீரகத்தால் 9 மாதங்கள் உயிர் பிழைத்த நோயாளி… சாத்தியமே இல்லைனு சொன்னதை சாதிச்சு காட்டிட்டாங்க… மருத்துவ உலகின் வரலாற்றுச் சாதனை..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிசயம்… ஆனால் 100% உண்மை..! பன்றி சிறுநீரகத்தால் 9 மாதங்கள் உயிர் பிழைத்த நோயாளி… சாத்தியமே இல்லைனு சொன்னதை சாதிச்சு காட்டிட்டாங்க… மருத்துவ உலகின் வரலாற்றுச் சாதனை..!

Published

on

கற்பனை செய்து பாருங்கள், ஒரு நோயாளியின் இரண்டு சிறுநீரகங்களும் சரியாக இயங்காமல், அவருடைய வாழ்க்கை டயாலிசிஸ் இயந்திரத்தையே நம்பி இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் மருத்துவர்கள் மனித சிறுநீரகத்திற்குப் பதிலாகப் பன்றியின் சிறுநீரகத்தைப் பொறுத்தி, அது சுமார் ஒன்பது மாதங்கள் வரை சரியாக இயங்கினால், அது மருத்துவ உலகின் மிகப்பெரிய அற்புதமாகக் கருதப்படும். அமெரிக்காவில் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி மற்றும் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் இத்தகைய ஒரு சோதனையை மேற்கொண்டு மாற்று அறுவை சிகிச்சை உலகில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். தி லான்செட் இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ‘டிம் ஆண்ட்ரூஸ்’ என்னும் நோயாளி கடுமையான சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்துவந்தார். ஜனவரி 2025-இல், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மருத்துவர்கள் அவருக்குப் பொறுத்தினர்.

இந்த மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் சுமார் 271 நாட்கள் (கிட்டத்தட்ட 9 மாதங்கள்) வரை அவருடைய உடலில் வெற்றிகரமாக இயங்கியது. இதன் மூலம் அவர் 9 மாதங்கள் டயாலிசிஸ் இயந்திரத்தை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, அந்தச் சிறுநீரகத்தின் ரத்த நாளங்களில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான அறிகுறிகளை மருத்துவர்கள் கண்டறிந்தனர். படிப்படியாகப் பாதிப்பு அதிகரித்துச் சிறுநீரகத்தின் செயல் திறன் குறைந்ததால், மருத்துவர்கள் அதனை உடலிலிருந்து அகற்ற வேண்டியதாயிற்று. இருப்பினும், அதற்குள் அவருக்கு மனிதக் கொடையாளரின் சிறுநீரகம் கிடைத்ததால், உடனடியாக அவருக்கு வெற்றிகரமாக மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Advertisement

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தின் உதவியுடன் இவ்வளவு நீண்ட காலம் வாழ்ந்த பிறகு, வெற்றிகரமாக மனித சிறுநீரகத்தைப் பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட உலகிலேயே முதல் நோயாளி இவர்தான் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலகளவில் சிறுநீரகம் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது மனிதக் கொடையாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. இந்த நிலையில், விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்குப் பயன்படுத்தும் ‘செனோடிரான்ஸ்பிளான்டேஷன் தொழில்நுடபம், மனித சிறுநீரகத்திற்காகக் காத்திருக்கும் நோயாளிகளுக்கு இடையே ஒரு தற்காலிக பாலமாகப் பயன்பட முடியும் என்பதை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in