LATEST NEWS
மெடிக்கல் மிராக்கிளா..? ஆன்மீக அதிசயமா..? கோமாவில் இருந்து மீண்ட பெண்… காத்திருந்த பயங்கர டுவிஸ்ட்.. பின்னணியில் இருக்கும் ஷாக்கிங் உண்மை..!!
அமெரிக்காவைச் சேர்ந்த வானியா வால்ட்ரியானி என்ற 45 வயது பெண்மணி, மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு (Brain bleed) காரணமாகப் பாதிக்கப்பட்டு மூன்று நாட்கள் கோமா நிலைக்குச் சென்று மீண்டுள்ளார். கடந்த 2014-ல் பார்ட்டி ஒன்றில் நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்ட இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று குடும்பத்தினரிடம் கைவிரித்துள்ளனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் அவரது உயிரைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருந்தபோது, தனது ஆன்மா உடலை விட்டு வெளியேறிப் பாய்வதைக் கண்டதாகக் கோமாவில் இருந்து மீண்ட பின்னர் வானியா ஒரு அதிர்ச்சியூட்டும் கதையைப் பகிர்ந்துள்ளார். தான் ஒரு அமைதியான, அழகான உலகிற்குச் சென்றதாகவும், அங்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்த தனது தந்தையை நேரில் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்தப் பரலோகத்தில் அவரது தந்தை வயதானவராக இல்லாமல் மிகவும் இளமையாகவும், ஒளிரும் வெளிச்சத்தோடும் காட்சியளித்ததாகக் கூறியுள்ளார்.
அங்கு அவளைக் கட்டிப்பிடித்த தந்தை, “மரணமே கதையின் முடிவு அல்ல; உண்மையில் மரணம் என்று ஒன்றுமே கிடையாது” என்று மனரீதியாக உணர்த்தி தைரியம் கொடுத்ததாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். மேலும், மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் உடலில் ஆன்மா புகுந்து வலியோடு கண்விழித்த வானியா, ஒரு புதிய மனிதராக மாறியதுடன், தனது தாய்மொழியான போர்த்துகீசிய மொழியை முற்றிலுமாக மறந்துவிட்டு ஆங்கிலத்தை மட்டுமே பேசும் விசித்திரமான நிலையை அடைந்துள்ளார். அறிவியல் மற்றும் ஆன்மீக உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ள இந்த ‘மரண விளிம்பு அனுபவம்’ (Near Death Experience) தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
