FLASH: பாலியல் வழக்கில் சிக்கிய திமுக நிர்வாகி நீக்கம்… துரைமுருகன் அதிரடி ஆக்க்ஷன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH: பாலியல் வழக்கில் சிக்கிய திமுக நிர்வாகி நீக்கம்… துரைமுருகன் அதிரடி ஆக்க்ஷன்..!!

Published

on

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தங்கும் விடுதிகள் மற்றும் அழகு நிலையங்களில் பாலியல் தொழில் நடத்தியதாக எழுந்த புகாரில், திமுக நிர்வாகி ராஜா ரகுபதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கும்பகோணத்தின் முக்கியப் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 10 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தனியார் தங்கும் விடுதி உரிமையாளரான தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் ராஜா ரகுபதியை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, பாலியல் வழக்கில் சிக்கிய திமுக நிர்வாகி ராஜா ரகுபதி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in