CRIME
“போலீஸே இப்படிச் செய்யலாமா..?” மயக்க மருந்து கொடுத்து ஆபாச வீடியோ… தப்பிக்க சிறுமியின் தந்தைக்கே காவலர் வைத்த ‘பயங்கர’ ஸ்கெட்ச்.. அம்பலமான அதிர்ச்சி உண்மை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மாவ் பகுதியில், தன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து தப்பிக்க, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மீதே பொய்யான பாலியல் புகார் அளித்த காவலர் விஷால் பாரதி உட்பட நான்கு பேரைச் இன்று காலையில் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த 2023 ஜூலை 7 அன்று, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு மதிப்பெண் சான்றிதழ் தருவதாகக் கூறித் தனது அறைக்கு வரவழைத்து, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆபாச வீடியோ எடுத்ததாகவும் காவலர் விஷால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆறு மாதங்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்துவிட்டு, தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டு வரும் விஷால், தண்டனையிலிருந்து தப்பிக்கவும் வழக்கைப் பலவீனப்படுத்தவும் இந்தச் சதியை அரங்கேற்றியுள்ளார்.
காவல்துறையின் விசாரணையில், விஷால் பாரதி சக்கினா என்ற பெண்ணிற்குப் பணம் கொடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தன் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2026 ஜூலை 23 அன்று பொய்யான புகாரைப் பதிவு செய்ய வைத்தது அம்பலமானது. இவர்களின் வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் அலைபேசி அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தபோது, நிசார் மற்றும் ஜோயா ஆகியோருக்கும் இந்தச் சதியில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு, சோனிதப்டா மைதானம் அருகே நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சதியை முறியடித்து உண்மையை வெளிக்கொண்டு வந்த காவல் குழுவிற்கு ரூ.10,000 பரிசு அறிவித்துள்ள எஸ்பி சர்வேஷ் குமார் மிஸ்ரா, அந்தப் பொய்யான வழக்கைத் தள்ளுபடி செய்யத் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
