CRIME
அய்யயோ..திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை.. பாடம் படித்துக்கொண்டிருந்த 9-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. பள்ளியில் நேர்ந்த நடுக்கமூட்டும் சம்பவம்..!!
தெலங்கானா மாநில துணை முதலமைச்சர் பட்டி விக்ரமார்காவின் சொந்தத் தொகுதியான கம்மம் மாவட்டம் போனக்கல் மண்டலத் தலைமையகத்தில் உள்ள எஸ்சி மாணவிகளுக்கான குருகுலப் பள்ளியில், வகுப்பறை மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் இருவர் படுகாயமடைந்தனர். பாடவேளையின் போது ஒன்பதாம் வகுப்பு வகுப்பறையின் மேற்கூரை திடீரென உடைந்து விழுந்ததில், பூஜிதா மற்றும் கீர்த்தனா ஆகிய இரு மாணவிகள் படுகாயமடைந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து அரசுப் பள்ளிகளின் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்புக் குறைபாடுகளை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மாணவிகளைப் பள்ளி ஊழியர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காகப் போனக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்களும், மாணவர் சங்க அமைப்புகளும் பள்ளி வளாகத்தின் முன் திரண்டு, துணை முதலமைச்சரின் சொந்தத் தொகுதியிலேயே அரசுப் பள்ளிகளின் நிலை இவ்வளவு மோசமாக இருப்பதா எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ள இத்தகைய பழமையான பள்ளி கட்டிடங்களை உடனடியாகப் பழுதுபார்க்க வேண்டும் என்றும், விபத்துக்குக் காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
