LATEST NEWS
FLASH: திமுக நிர்வாகி மீது தவெகவினர் இரும்பு கம்பியால் பயங்கர தாக்குதல்..? நாகையில் நள்ளிரவில் நடந்த கொடூர சம்பவத்தால் பரபரப்பு..!!
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் மீது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இரும்புக் கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தவெகவினர் மீது திமுக தரப்பில் பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு இதுபோன்ற குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாகச் செயல்படுவதாகவும் எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், இந்தத் தாக்குதல் சம்பவம் மற்றும் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக தவெக தரப்பிலோ அல்லது காவல்துறையினரிடமிருந்தோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.
