“விட்டா ரிப்பன் மாளிகையவே வித்துருப்பாங்க” கஜானாவையே காணாம பண்ணிட்டாங்க… திமுகவை பிரித்து மேய்ந்த த.வெ.க அமைச்சர்கள்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“விட்டா ரிப்பன் மாளிகையவே வித்துருப்பாங்க” கஜானாவையே காணாம பண்ணிட்டாங்க… திமுகவை பிரித்து மேய்ந்த த.வெ.க அமைச்சர்கள்..!!!

Published

on

“திமுகவை விட்டிருந்தால் சென்னை ரிப்பன் மாளிகையையே விற்றிருப்பார்கள்” என்றும், கடந்த ஆட்சியில் தமிழக அரசு கஜானாவைக் காலி செய்யாமல், கஜானாவையே காணாமல் போகச் செய்துவிட்டார்கள் என்றும் தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் திமுகவை கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளனர். சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்த தவெக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த் உள்ளிட்டோர், கடந்த திமுக ஆட்சியில் தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டு ஒடுக்கப்பட்டதை ஒப்பிட்டுப் பேசினர்.

தங்களது தவெக அரசு அமைந்து இன்னும் 100 நாட்களே ஆவதால், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடுதல் அவகாசம் தருமாறு அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர். மேலும், தற்போதைய முதல்வர் விஜய் அவர்கள் “போராடும் தொழிலாளர்கள் மீது காவல்துறை கை வைக்கக் கூடாது” என உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர்கள், தவெக அரசு எப்போதும் தொழிலாளர்களின் பக்கமே நிற்கும் என உறுதியளித்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in