“ஜாதக தோஷம் கழிக்கிறோம்…” உள்ளே வா.. 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்.. போலிச் சாமியாரின் காம லீலைகள் அம்பலம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஜாதக தோஷம் கழிக்கிறோம்…” உள்ளே வா.. 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்.. போலிச் சாமியாரின் காம லீலைகள் அம்பலம்..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலத்தில் ஜாதக தோஷம் கழிப்பதாகக் கூறி 17 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்வர் மஹராஜ் என்பவன், அச்சிறுமியின் ஜாதகத்தில் உள்ள கடுமையான தோஷத்தைச் சிறப்புச் சடங்குகள் மூலம் நிவர்த்தி செய்வதாகக் கூறி குடும்பத்தினரை நம்பவைத்துள்ளான்.

கடந்த ஜூன் மாதம் சிறுமியின் வீட்டிலேயே பரிகாரச் சடங்கு செய்வதாக நாடகமாடிய அவன், சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இச்சம்பவம் குறித்து வெளியே யாருடமாவது கூறினால் தோஷம் மீண்டும் தாக்கி அசம்பாவிதம் நடக்கும் என மிரட்டியதால், பயந்துபோன அச்சிறுமி இந்த விபரீதத்தை யாரிடமும் கூறாமல் மறைத்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், அண்மையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது குடும்பத்தினருக்கு தெரியவரவே இக்கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் விவேகானந்த சவுக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், தலைமறைவான குற்றவாளி மீது பாரதிய நியாய சன்ஹிதா , போக்சோ சட்டம் மற்றும் மூடநம்பிக்கை எதிர்ப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in