CRIME
ச்சே இவளெல்லாம் ஒரு தாயா..? 2 வயது மகனைக் பிஸ்கட்டில் விஷம் வைத்து கொன்றுவிட்டு… போலீஸுக்கே அல்வா கொடுத்துவிட்டு… மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய கொடூரத் தாய்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சொந்த மகனைக் கொன்ற வழக்கில் கைதான பெண், காவல்துறையின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ராம்பூர்ஹரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குமாரி என்ற அப்பெண், கடந்த ஆகஸ்ட் 20 அன்று தனது இரண்டரை வயது மகனுக்கு பிஸ்கட்டில் விஷம் கலந்து கொடுத்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்ததால், சிறை நிர்வாகம் அவரது மருத்துவச் சிகிச்சைக்காக ஆகஸ்ட் 29 அன்று SKMCH மருத்துவமனையின் தாய் மற்றும் சேய் நல (MCH) வார்டில் அனுமதித்தது.
அங்குப் பெண் காவல்துறையினரின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த ஆர்த்தி குமாரி, புதன்கிழமை அதிகாலை கழிப்பறைக்குச் செல்வதாகக் கூறி காவலர்களை ஏமாற்றிவிட்டு மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தீவிரமடைந்த காவல்துறையினர், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதுடன், மருத்துவமனை CCTV காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்களின் அலட்சியம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
