“நான் சென்சஸ் டிபார்ட்மென்ட்ல இருந்து வர்றேன்..!” மக்கள் தொகை கணக்கெடுப்பு என்று கூறி வீட்டிற்குள் புகுந்த பெண்.. அடுத்த நொடியே மூதாட்டிக்கு நேர்ந்த கொடூர கதி.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“நான் சென்சஸ் டிபார்ட்மென்ட்ல இருந்து வர்றேன்..!” மக்கள் தொகை கணக்கெடுப்பு என்று கூறி வீட்டிற்குள் புகுந்த பெண்.. அடுத்த நொடியே மூதாட்டிக்கு நேர்ந்த கொடூர கதி.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

ஜார்கண்ட் மாநிலம் ஜம்ஷேத்பூரில், மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை ஊழியர் போல நடித்து அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த பெண் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள், வயதான மூதாட்டியைப் பிணைக் கைதியாகப் பிடித்துத் தாக்கி நகைகளைச் சூறையாடிய பகல் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்ஷேத்பூரின் மாங்கோ காவல் எல்லைக்குட்பட்ட ஜவஹர்நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா உத்யான் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் லீலாவதி அம்மா என்ற மூதாட்டி, திங்கட்கிழமை பகல் நேரத்தில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு மர்மப் பெண், தன்னை மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை ஊழியர் என்று கூறி மூதாட்டியின் நம்பிக்கையைப் பெற்று வீட்டிற்குள் நுழைந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அந்த நொடிக் கட்டத்தில், அவளுக்குத் துணையாக மேலும் இரண்டு வாலிபர்கள் திடீரென வீட்டிற்குள் புகுந்து, மூதாட்டி லீலாவதியைத் தள்ளிவிட்டுப் பலவந்தமாகப் பிணைக் கைதியாகப் பிடித்துள்ளனர்.

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மூதாட்டியை வீட்டிற்குள் சிறைபிடித்து வைத்த அந்த அசுரக் கும்பல், அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி மற்றும் காதணிகளைக் கொடூரமான முறையில் பறித்துக் கொண்டுள்ளது. மூதாட்டி இதற்கு அசாத்திய துணிச்சலுடன் எதிர்ப்புத் தெரிவித்த போது, அந்தப் போதை வாலிபர்கள் அவரைச் சரமாரியாகத் தாக்கியதில் அவரது வாய் மற்றும் முகம் சிதைந்து ஒரு பல்லும் உடைந்து போனது. கொள்ளையடித்த பின்னர் மூதாட்டியை வீட்டின் பால்கனிக்குள் பூட்டிவிட்டுத் தப்பியோடிய அந்தக் கும்பலின் அராஜகத்தால் அதிர்ச்சியடைந்த அவர், பால்கனியில் இருந்து சத்தமிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். அண்டை வீட்டாரால் மீட்கப்பட்ட மூதாட்டியின் கணவர் பி. எஸ். பிள்ளை மற்றும் மாங்கோ காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து போலியான கணக்கெடுப்புப் பெண் மற்றும் அவளது கூட்டாளிகளை அசுர வேகத்தில் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in